ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

எலிஸ்பெர்த் (மாமிகதை)

மாமிகதை - 

மாமி எங்கள் வீட்டில் இருப்பதால், வார இறுதியில் உறவுகளின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது.. ஒரு கூட்டம் வந்தது..

`அய்யோ அத்த.. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க. நீங்க நடந்துபோன எலிஸ்பெர்த் மஹாராணி போல் இருக்கும். ஊரே வேடிக்கைப்பார்க்கும். அவ்வளவு அழகு எங்கத்த. இப்போ பாருங்க காதுல கழுத்துல ஒண்ணுமே இல்ல.. ச்சே பார்க்கவே நல்லா இல்லெ. நகையெல்லாம் போட்டுட்டு எங்கத்த நடந்தா சாட்சாத் அம்மனை நேரில் பார்த்த மாதிரியே இருக்கும்...’

அத்த எங்கே பதில் சொல்வது.. அங்க ஒண்ணுமே முடியலையே.. இப்போதெல்லாம் ஒரே அமைதி. என்னான்னு தெரியல. பேசுவது கூட குறைந்துவிட்டது. பார்வை சரியாகத்தெரியவில்லை.. நாங்களே கொடுத்தால்தான் உண்டு. எதுவும் வாய்திறந்து கேட்பதில்லை.

மௌனமாக சிரித்துக்கொண்டே.. `இனி என்ன இருக்கு.. செத்தா எடுத்துப்போட்டிடுங்க...’ என்றார் மாமி.

`பின்னே..எடுத்துப்போடாம, வைச்சுக்கிட்டு என்ன பண்ணுவதாம்.. ஹிஹிஹி அத்த அத்த...’

ஜோக் அடிக்கறாங்களாம்.. வெறி வரல. யார் அழுதா இவர்களெல்லாம் வரவில்லை என்று..!!!

யாரும் வரவேண்டாமென்று சொன்னால் கேட்கிறாரா? அம்மாவைப் பார்க்க அவர்களுக்கு ஆசை யிருக்காதா? அம்மா மேல் பாசம் அவர்களுக்கெல்லாம்.. நல்லா வாழ்ந்தவங்க.

இப்போ அவருக்குத்தேவை பாசமா???? அது நாங்க கொடுப்போம்.. வராமல் இருந்தாலே கோடி புண்ணியம்.
சிலர் வந்துவிட்டு போனாலே.. கெட்ட வைஃப்ரேஷன் நீண்ட நேரம் சுற்றுகிறது வீட்டில்... என்னமோ மாதிரி இருக்கும்... உடலில் ஹூமோகுளோபின் குறைந்தது போல்..!

3 கருத்துகள்:

  1. வீட்டுக்கு ஆகாதவர்கள் வந்து போனால் அங்கே அதிர்வலைகள் இருக்கும் என்பது உணமை விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சார். நலமா? பதிவு ஒன்றும் எழுதுவதில்லை. பத்திரிக்கையில் படித்தேன் புதுக்கவிதை பற்றிய ஆய்வு. அற்புதமாக இருந்தது. தொடருங்கள். அங்கே வருவதை இங்கே வலைப்பூவிலும் பதிவேற்றிப் பகிருங்கள்.. பலர் வாசிக்கின்ற வாய்ப்பு ஏற்படுமே. எனக்கென்னவோ, பத்திரிகையை விட வலைப்பூவில் அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் இருக்கின்றார்கள் என்றே தோன்றுகிறது.
      நிச்சய்மாக பத்திரிகையை அதிகம் பேர் வாங்குகிறார்கள் ஆனால் குறிப்பிட்ட சிலர்தான் அங்கே பிரசுரமாகுகின்ற கதைகள் கவிதைகள் கட்டுரைகளை வாசிக்கின்றார்கள். (பலரைடம் கேட்டுக்கேட்டு நான் செய்த ஆய்வு இது)

      நன்றி சார் கருத்திற்கு. தொடர்ந்து வாருங்கள்.. உற்சாகம் கொடுங்கள்.

      நீக்கு
  2. உடலில் ஹூமோகுளோபின் குறைந்தது போல்..!

    பதிலளிநீக்கு