வெள்ளி, ஜனவரி 02, 2015

பதிவர்

ஒருவருடைய ப்ளாக் செல்கிறோம். அங்கே அவர்கள் இட்ட பதிவுகளை நாம் வாசிக்கின்றோம். அப்பதிவாகப் பட்டது நம்மை கவரவோ அல்லது காட்டத்தை ஏற்படுத்தவோ செய்கிறபோது, நாம் நமது கருத்துகளை அங்கே பகிர்ந்து நமது மன உணர்வுகளை எழுத்துகள் மூலமாக வெளிப்படுத்துகிறோம். அப்போது, அக்கருத்தாகப்பட்டது அந்தப்பதிவரின் அனுமதிக்குப்பிறகே பிரசுரிக்கப்படும் என்கிற சமிக்ஞையோடு விடைபெறுகிறது.
கருத்தைச் சொல்லிவிட்டு வந்த நாம் அக்கருத்திற்கு எம்மாதிரியான எதிர்மறை அல்லது நேர்மறை கருத்துக்கள் பதிவர் மூலம் கிடைக்க்கப்பெறும் என்று காத்திருக்கின்ற போது, அக்கருத்தாகப்பட்டதை அப்பதிவர் ஒரு பொருட்டாகக் கருதாமல், அனுமதித்து பிரசுரிக்காமல்அலட்சியம் செய்துவிட்டும் போது, வாசகர், கருத்துப்பகிர்கிறவர் என்கிற கோணத்தில் நாம் நமது நேரத்தை தேவையில்லாமல் இவரின் பதிவின் கீழ் வீனடித்து விட்டோமே, என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை. (அதற்குப்பிறகு அப்பதிவர் என்ன சொன்னாலும் அங்கே சென்று வாசிக்கவேண்டும் கருத்துப்பகிர வேண்டும் என்கிற எண்ணமே வராது என்பது வேறு விஷயம்.)
இதுபோன்ற பதிவர்கள், அனுமதிக்குப்பிறகு பிரசுரிக்கப்படும் என்று சொல்லாமல், பெரிய எழுத்தாளர்கள் போல், கருத்துகளுக்கு அனுமதியில்லை, என்று, கருத்துப்பகிர்வு பகுதியை எடுத்துவிடலாமே..!
வாசகர்களின் கருத்து முக்கியம். அதுதான் வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி பூஸ்ட் என்று பொதுவில் அப்பாவியாய் சொல்லிவிட்டு கருத்து சொல்கிறவர்களை அலட்சியம் செய்கிற வளரும் எழுத்தாளர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆமாம் இவர் பெரிய கருத்து கந்தசாமி - இவரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று முகநூலில் அலுத்துக்கொள்கிறார்; என்று முணுமுணுப்பவரா நீங்கள்...? அப்படியென்றால் நீங்கள் நிஜமாலுமே பரிதாபத்திற்குரியவர்

8 கருத்துகள்:

  1. சரியான கருத்து. கொஞ்சம் ரசிக்கிற மாதிரியோ அல்லது பாராட்டு தெரிவிக்கிற மாதிரியோ இருக்கும் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுவிட்டு அப்புறம் போய்ப்பார்த்தால் வருகைக்கு நன்றி என்ற வார்த்தையைக் கூட சிலர் எழுதுவதில்லை. பெரிய எழுத்தாளர்களிடம் இது போன்ற போக்கு இருக்கிறது. பிழைத்துப் போகட்டும் விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம்தான் சகோ.. வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
  2. சில கருத்துகள் வெளியிடப்படுவதில்லை என்பது உண்மை தான்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. பெண்ணாக இருக்கின்ற பட்சத்தில் அனுமதிக்குப்பிறகே வெளியிடப்படும் என்பது அவசியமே. எனக்கும் சில கெட்ட வார்த்தைகளைத்தாக்கி வந்த பின்னூட்டம் வந்துள்ளது. அதை நான் அலட்சியம் செய்துள்ளேன்..
      ஆனால் நிஜமாலுமே கருத்து தெரிவிக்கவேண்டும் என்று கருத்தூன்றி வாசித்து கருத்து பகிர்கிறவர்களை அலட்சியம் செய்வது அபத்தம் தானே..!

      நன்றி வெங்கட்.. புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
  3. பதிவர் குறித்து ரொம்ப நல்லாச் சொல்லியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  4. நிஜம்தான். மெனக்கிட்டு நம் பதிவையும் வாசித்து கருத்து சொல்பவர்களை மதிக்கத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. விச்சு அதுதான் உண்மையும் கூட. நன்றி புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு