வெள்ளி, நவம்பர் 18, 2011

எல்லோரும் நல்லவர்கள்

பழைய திரைப்படம்
கிலைமக்ஸ்
விலகும் மர்மங்கள்
போலிஸ் வருவார்
நாம் கைத்தட்டுவோம்
குதூகலமாக..குழந்தைகளாக

இயற்கை ரசனை

பூ சிகப்பு, இலை பச்சை
மலர்ந்தது 
ஒரு காலை பொழுது

புத்தகம்

சிரிக்காமல் 
உனது பக்கங்களை 
புரட்டமுடியவில்லை என்னால்.! 
அது நகைப்புக்குரியதல்ல 
என்பது தெரிந்த போதிலும்.!

ஒழுக்க சிந்தனையும் நாமும்

ஒழுக்கத்தைப்பற்றி, அன்றும் சரி, இன்றும் சரி நமது உயர்ந்த சிந்தனையில் உதித்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவனிடம்/ஒருவளிடம் சென்று உடலுறவு (காதல்/கள்ளக்காதல்) வைத்துக்கொள்வது மட்டும்தான் என்பதைப்போல் ஆகிவிட்டது நிலை.! 

ஒழுக்கமின்மையைப்பற்றி 100 காரணங்கள் இருந்தால், அதில் இந்த செய்கை நடுவிலோ அல்லது இறுதியிலோ தான் இருக்கும். முதலில் இருக்க வேண்டிய பல ஒழுக்கச்சீர்கேடுகள் நிறைய இருப்பினும், இதை மட்டும் பிடித்துகொண்டு, ஒருவரது அந்தரங்கத்தை ஆராய்ந்து, அவனுக்கு ஒழுக்கமில்லை, அவளுக்கு கற்பில்லை என இன்னமும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது நமக்கெல்லாம் ஒரு சுவாரிஸ்யமான பொழுது போக்கு.! ஏன் இப்படி?? இலகுவாக புண்படுத்தலாம் என்பதாலா? விரும்பிச்செய்கிறவனும் பெண் மீது பழிபோட்டு தப்பிக்கப்பார்க்கும் சமூகமிது. எச்சரிக்கை!!!

கண்ட இடத்தில் காரி துப்பிக்கொண்டு,காது குடைந்துக்கொண்டு வேலைக்குப் போகும் பெண்களின் ஒழுக்கத்தைப்பற்றி பேசுகிறவனை முதலில் ஜெயிலில் போடவேண்டும்

வாசகங்களும் வாக்கியங்களும்

பொட்டு வைத்து. 
கோடு இட்டு! 
காதுமடகள் வரைந்து? 
நட்சத்திரப் பூக்களை மாலையாக்கி** 
ஆடையிட்டு {[]} 
அடைக்கலம் கொடுத்து ()
சாய்ந்து சரிந்து கொடுத்து//
கூட்டிக்கழித்து + -
கன்னாபின்னான்னு கோலமிட்டு அ ஆ இ ஈ உ ஊ
நடுநடுவே இதையும் #@&^
அலங்கரித்துமா இன்னும் உன்னைக் கவரவில்லை!!??

விபத்து

அம்புலன்ஸில் உள்ளவர்களை
காப்பாற்ற வருகிற்து
இன்னொரு அம்புலன்ஸ்

வியாழன், நவம்பர் 17, 2011

மரணபயம்

மருத்துவமனையில்
மருந்து நெடியடிக்கும்
நோயாளிகளின் அருகில்
வெள்ளை ஆடையோடு
நடமாடாதே!
கைப்பிடித்துக் கதறுவாள் தாய்...
’’டாக்டர், என் புள்ளையை, எப்படியாவது காப்பாத்துங்க!’’