சனி, நவம்பர் 19, 2011

அறிவியல்

வேதியியல்


அறிவின் ஊற்று
ஆராய்ச்சியின் முடிவு

சோதனைக்கு பலியாகும்
சோதா ’பொந்து’ எலிகள் தாம்,
அறிவியலாளர்களின் பரிசு

வலையில் சிக்கவைக்க
எத்தனையோ சிந்தனைச் சிற்பங்கள்..
எல்லாம் ‘ருசிகண்ட பூனை’ அனுபவங்கள்
அறிவியல் வியூகங்கள்..!

’கண்ணே, முத்தே, மணியே..
ஓடி வா..
உன் வர்ண விதை வேண்டுகிறேன்..
வறண்டுக்கொண்டிருக்கும் 
என் கவிதை ஊற்று உயிர் பெற..!’

பொரியில் (பொறியியல்)வைக்கப்படும் 
வேதியியல் பாஷாணம் தான்..
இந்தக் கொஞ்சலும்
கெஞ்சலும்....

பிடிப்பட்ட எலிகளுக்கு
மின்சார அறுவைச்சிகிச்சை..

வேதியலில் (வேதனையில்)
வெளியேறும்...
’விந்து’ வே....
ஆதாரத்தின் முடிவு.!?

பெண்ணான குழந்தை

எல்லா நாளும் 

சிறப்புப்பெறுவது 

எங்களால் தான்..

சராசரி நினைவுகள்:



நோவும் போது
என் மருத்துவரையும்

காதலென்றால்
என் உயிரே..உன்னையும்

காமமென்றால்
என் குருவையும்

அன்பு என்றால்
என் அப்பாவையும்..

துன்பமென்றால்
என் இறைவனையும்

மகிழ்ச்சியின் போது
கண்ணாடியையும்....

நினைப்பேன்..................
சராசரியாக!!!

குழப்பம்

அவர் இவரல்ல,
இவர் அவரல்ல,
தெளிவான ஆதாரத்தோடு

அவர் வேறு
இவர் வேறு
அதே, ஆதாரத்தோடு

இருவரும் 
ஒருவரா!!
மனம் ஆர்ப்பரிக்கிறது...

அந்த ஒருவர் 
யார்?
முகமுடி அவதாரமா..!?

அவர் இவராகவும் 
இருக்கலாம்.!
இவர் அவராகவும் 
இருக்கலாம்.!

இதில் ’......... ’
என்பவர், யார்??
என்பதுவே என் குழப்பம்!

முரண்

கலர் கலர் 
நிறங்களில்
வர்ணம்

’வயாக்ரா’



வழுக்கைத்தலையில்
வர்ண விக்..

சொத்தைப்பற்களுக்கிடையே
ஒரு தங்கப்பல்..

வெள்ளைத்தாடியில்
கருப்பு டைய்..

கிட்டே வந்தால்
அரபு அத்தர் வாடை..

பெண்கள் பூசும் 
பிங்க் பௌடர், முகத்தில்..

பாதிவரை பட்டன் திறந்த 
பளப்பளக்கும் சொக்கா..

கழுத்தில் தொங்கும்
கலர்போன வெள்ளிச் சரடு..

வரைந்த அரும்பு மீசை
வராத குறும்புப்பார்வை..

இவர் ’வயாக்ரா’
எடுப்பவரோ..?

எனக்கு மனபிராந்தியோ!!?

உனக்காகவே

எல்லாம் உனக்காக

முகர்ந்துப் பார்த்தது
மோதிப்பார்த்தது
சீண்டிப்பார்த்தது
சீறியும் பார்த்தது
கத்திப்பார்த்தது..

இரண்டு மூன்று முறையல்ல
பல முறை சுற்றி
வலம் வந்தும் 
செய்வதறியாது
அமைதியாக திரும்பிச் சென்றது
பூனை...

அசைபவரிடம் 
ஆசை கொள்வது தான் 
உயிர்களின் இயல்பு(போ)!?

சிலவேளையில்
உன் முன்னே, நான்
அசைந்த்துக் கொண்டே... 
செத்த எலியாக...

உன் அமைதியான
சீண்டல் வேண்டி....!!!

வலிகளில் உதிக்கின்ற
சில கிறுக்கல்களுக்காக

அதுவும் உனக்காக....!