- ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
- Strong people don't put others down. They lift them up." Michael P. Watson
வெள்ளி, செப்டம்பர் 14, 2012
வியாழன், செப்டம்பர் 13, 2012
நீண்ட கூந்தல் அவசியமா?
திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்திருக்க மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும். கூந்தல் பராமரிப்பு என்பது அவ்வளவு சுலபமானதல்ல. சரியான முறையில் கூந்தலைப் பாதுகாக்காவிடில் பேன் பொடுகு பிடித்துவிடும். முடி உதிரும். தலையில் புண்கள் வரும்.
முன்பெல்லாம் நான் மிகவும் மெலிந்து காணப்படுவேன். ஆனால் தலையில் பேன் மட்டும் அதிகமாக மொய்க்கும். இரட்டை இரட்டையாக மொய்க்கும். எப்போது பார்த்தாலும் கைகள் தலையையே பிராண்டிக்கொண்டிருக்கும். சாப்பிடுகிற சாப்பாட்டையெல்லாம் பேனுக்குக்கொடுக்கின்றீர்களா ? என்று கூட சிலர் கிண்டலாகக் கேட்பார்கள்.
நீண்ட கூந்தல் வைத்திருக்கின்ற காலகடத்தில், பள்ளிக்குச் செல்லுகையில், தலைவாரி சடை பின்னி பள்ளிக்குக் கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சரியாக வாரிக்கொள்ளாமல் சும்மானாலும் சுருட்டிக்கொண்டு பள்ளிக்குச்சென்றால், பொது மேடையில் பல மாணவர்களின் முன்னிலையில், இது சரியில்லாத தலைவாரல்; என்று உதாரணம் காட்டி அவமதிப்பார்கள். அதற்காகவே எண்ணெய் வைத்து, இழுத்து வாரி, இறுக்கமாக இரண்டு சடைகள் நுனிவரை பின்னி, அதை ரிப்பன்னால் தொடர்ந்துப் பின்னி, மடித்துக்கட்டிக் கொள்வோம். (மூணு படத்தில் பள்ளிக்குச்செல்லும் நடிகை ஸ்ருதி போல்.)
இந்த இரட்டைச் சடை பின்னல் பார்ப்பதற்கு சுலபம் போல்தான் இருக்கும், ஆனால் அதைப் பின்னுவதற்கு மிகவும் கடினம். முதலில் நேர்கோடு, அதன் பிறகு பின்பக்கம் நேர்கோடு எடுத்து முடியை இரண்டாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். வலதுபக்கம் வாரி சடை பின்னி, ரிப்பன் கொண்டு கட்டியபிறகு, இடதுபக்கம் வார வேண்டும். எல்லாம் சரியாக செய்துமுடித்து கண்ணாடியைப்பார்த்தால் ஒன்று மேலேயும் மற்றொன்று கொஞ்சம் இறங்கி கீழேயும் இருக்கும். ஒன்றை அவிழ்த்து சரி செய்து பின்னியபின் மற்றொன்று கோளாறாக இருப்பதைப்போல் இருக்கும். எல்லாம் சரியாக வந்ததுபோல் இருந்தால் ஒரு பக்கம் சடை மொத்தமாகவும் இன்னொரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். அப்படி இப்படி என பின்னிக் கொண்டு பள்ளிக்குச்சென்றால், தோழிகள் கிண்டல் செய்வார்கள், `உன் பின் பக்கம் இருக்கின்ற பின்னல் வகிடு, கிள்ளான் ஆறு மாதிரி கோணல் மாணலாக செல்கிறதே.!’ என்று.
ஆக, யாருமே இல்லாமல் தனியாளாக நமது நீண்ட கூந்தலை நாமே பின்னி முடிப்பதென்பது கஷடமான காரியமே..
வாரத்திற்கு இரு முறை தலை குளிக்கவேண்டும். அதுவும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில்தான் தலை குளியல். மற்ற நாட்களில் மழையில் நனைந்தால் கூட, தலையைத் துண்டால் துடைத்துக்கொண்டு உடம்போடுதான் குளித்துவிட்டு வருவோம்.
நாங்கள் கூட்டுக்குடும்பம். ஆக, நிறைய பெண்கள் இருப்போம். வீட்டில் ஷம்பூ எல்லாம் வாங்க மாட்டார்கள். கட்டுப்படியாகாது என்பதால். கிலோ கணக்கில் சியக்காய்களை வாங்கிவைத்துக்கொண்டு, அதை ஒரு அண்டாவில் ஊறவைத்து, அம்மியில் நன்கு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கவேண்டும். அதன் நுரையே ஷம்பூ போல் தான் இருக்கும்.
நாங்களே குளித்தால், மிக ஜாலியாக குளித்துவிட்டு வருவோம், சில வேளைகளில் அம்மா, தலை குளிக்கும்போது, குளியலறைக்குள் நுழைவார், திக்கென்றிருக்கும். அதாவது, தலை கசக்கி விடுகிறேன் என்று சொல்லி, தலை முடியை பிடித்து பிய்த்து இழுத்து, பலம் கொண்டு தேய்த்து கசக்கிக்குளிப்பாட்டி ஒரு வழி பண்ணிவிடுவார்.
அவர் தலை தேய்த்துக்குளிப்பாட்டி விட்டால், முடியில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காணவே இரண்டு நாள்கள் ஆகும். சடைமுனி மாதிரி முடி அப்படியே திரித்துக்கொண்டும் முறுக்கிக்கொண்டும் நிற்கும். எண்ணெய்யை விட்டு வழித்து வழித்து சீவுகிற போதுதான் பழைய நிலைக்கே வரும். கொடுமையாக இருக்கும் நிலைமை..
முன்பெல்லாம் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்துகொண்டு ஒருவர் தலையை ஒருவர் பேன் பார்ப்பார்கள். கதறக்கதற பேன் சீப்பு கொண்டு சீவுவார்கள்..பேன்கள் அப்படியே கொட்டும், அங்கேயும் இங்கேயும் உதிரும். அதை பெருவிரல் நகங் கொண்டு படக் படக் என்று நசுக்கிச்சாகடிப்பார்கள். கையில் வாங்கிக்கொண்டு இரு நக இடுக்கிலும் வைத்துக்கொண்டு சாகடிக்க அவ்வளவு பிரியம்.
பேன் விடுகதைகளும் அப்போது மிகப்பிரபலம். கிளை இல்லாத மரங்களில் ஏறுவான், மரத்திற்கு மரம் தாவுவான், குரங்கு அல்ல, அவன் யார்? எல்லோருக்கும் கால்கள் கீழே இருக்கும், ஒருவனுக்கு மட்டும் கால்கள் தலையில் இருக்கும், அவன் யார்? என இப்படி....
நம் இனப் பெண்பிள்ளைகளின் தலைகளில் பேன் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். காரணம் எல்லோருக்கும் நிச்சயமாக பேன் பிடிக்கும். முன்பு, நான் பள்ளிப்பயிலும் காலகட்டத்தில், அரசாங்க கிளினிக்குகளில் பேன் மருந்து இலவசமாகக் கொடுக்கப்பட்டது. பேன்களை ஒழிப்போம் என்கிற பிரச்சாரப் பலகைகள் எல்லாத் தமிழ் பள்ளிகளிலும் காணலாம். பேன்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை நன்னெறி பாட நூலிலும் சேர்த்திருப்பார்கள்.
நீண்ட கூந்தலைச் சரியாகப் பராமரிக்கதெரியாமல் இருப்பவர்களுக்கு சடைமுனி மாதிரி திரிந்த கூந்தல் ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். அதிக எண்ணெய் விட்டு சரியாக வாரிவந்தால் இப்பிரச்சனைக்கு ஒரு விடிவு ஏற்படும்.
இப்படி எண்ணெயினை அதிகம் விட்டு வாரிவருவதால், நேரம் செல்லச்செல்ல அந்த எண்ணெய்யானது நெற்றியின் வழி முகமெல்லாம் வடியத்துவங்கிவிடும். எண்ணெய் வடிகிற முகத்தில் பளீரென்று படுகிற சூரியன் விட்டுச்செல்கிற கோலமானது, இன்னும் கொடுமை. முகத்திற்கு கருமையைக் கூட்டிவிட்டுச்செல்லும். பல இனங்கள் பயிலும் பள்ளிகளில், நம்மவர்களைக் கண்டாலே, ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். நமது எண்ணெய் வழிகிற முகம் கவரும்படியே இருக்காது. பழைய எண்ணெய்யின் நாற்றம் வேறு தூக்கலாக இருக்கும். அதுவும் ஒரு காரணம்.
இவ்வளவு அவஸ்தைகளிலும், நீளமான கூந்தலுக்குத்தான் காவியம் என்று கவிஞர் சொல்லிச்சென்றுள்ளார் என்பதால், நீண்ட கூந்தல் பிடிக்கவில்லை, முடி வெட்டிக்கொள்ளப் போகிறோமென்று சொன்னால், அப்பாவிற்கு அவ்வளவு கோபம் வரும். நீண்ட கூந்தல்தான் அழகு. முடி வெட்டிக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டாம் அப்படியே எங்கேயாவது குளம் குட்டையில் விழுந்து சாவுங்கள், என்று சொல்லி மிரட்டுவார்கள். சாபமிடுவார்கள். அவ்வளவு ஸ்டிரிக். கூந்தல் விஷயத்தில்.
சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா எல்லாம் விக் வைத்துக்கொண்டு குடும்ப பாங்கான படங்களின் நீண்ட கூந்தலைக் காட்டி நடிக்கின்றார்கள். அவர்கள் மாதிரி நாங்களும் இருக்கவேண்டுமென்றால் எப்படி முடியும்? முடி வெட்டினால் காலை வெட்டுவேன், என்று கூட மிரட்டியிருக்கின்றார் அப்பா.
சில வேளைகளில், ஆரோக்கியமில்லாத நீண்ட கூந்தலின் நுனியில், கூந்தல் வெடிப்பு இருக்கும். அதாவது ஒரே முடிதான் ஆனால் அதன் நுனியில் மட்டும் வெடித்து இரண்டாகத்தெரியும். இப்படி இருந்தால் கூந்தல் வளராது என்று சொல்லி, பலவிதமான எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்திய அனுபவமும் உண்டு.
பாம்பு எண்ணெய் - எப்படித்தான் செய்வார்களோ தெரியாது, ஆனால் அதன் பெயர், பாம்பு எண்ணெய். பாம்பின் கொழுப்பில் செய்வார்கள் போலிருக்கு. கூந்தலின் நுனியில் அழுத்தித்தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும் என்பார்கள். (அட முருகா, கூந்தலின் நுனிக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் சம்பந்தமிருக்கா என்ன.!) செம நாற்றம் தெரியுங்களா இந்த எண்ணெய். எங்க சின்னம்மா அடிக்கடி இதைப் பயன்படுத்துவார். வாடை, அவரின் பக்கமே செல்ல முடியாமல் செய்துவிடும்.
உடும்பு எண்ணெய் - கடவுளே இதுவும் பயங்கரமாக நாற்றமடிக்கும். கூந்தல் வளர்ச்சியில் நம்மவர்களுக்குத்தான் எவ்வளவு பேராசை பாருங்களேன்.
சொந்தமாகத்தயாரிந்த தேங்காய் எண்ணெய் - தேங்காய்ப்பாலை நன்கு காய்ச்சி எண்ணெய்யாக்கி அதில் செம்பருத்தி, பொண்ணங்கன்னி, செண்பகப்பூ, வெந்தயம், வேர்கள் என சேர்த்து வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துக்கொள்ளவார்கள். எங்களுக்கும் எங்களின் அம்மா இதைத்தான் செய்து கொடுப்பார்.
கடையில் விற்கிற பொண்ணாங்கன்னித்தையலம் - முன்பு இவ்வெண்ணெய் இங்கே மிகப்பிரபலம். ஒரு பெண் நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டபடி போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார். கரும் பச்சை வர்ணத்தில் இருக்க்கும் இந்த எண்ணெய். இதைத் தேய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பேன் புளுத்துக்கிடக்கும். காரணம் அதன் மணம் பேனுக்கு விருப்பமாம்.
இவற்றையெல்லாம் மாறி மாறி தேய்த்துக்கொண்டிருந்தாலும் கூந்தல் எலி வால் மாதிரி மெலிந்துதான் இருக்கும் சிலருக்கு. கூந்தல் வளர்ச்சியில் எண்ணெய்களின் பங்கு, சிக்கல் இல்லாமல் வாரிக்கொள்வதற்குத்தான், மற்றபடி உணவுப்பழக்கம், தூய்மை, நல்ல காற்று, நீர், வயது, சுற்றுச்சூழல், கவலையில்லா நிலை, வாழ்க்கை முறை, பரம்பரை போன்றவைகள்தான் கூந்தல் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றதென்று இன்னுமும் நம்ப மறுப்பவர்களை மாற்றுவது கஷ்டமே.
அண்மையில், என் பள்ளித்தோழி ஒருவளை ஒரு திருமண வைபவத்தில் சந்தித்தேன். பள்ளியில் பயில்கிற போது, நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ட கூந்தல் வைத்திருப்போம் இருவரும். இப்போது என் கூந்தல் எனக்கு தோள்வரைதான் இருக்கிறது, ஆனால் அவள் இன்னமும் அதே நீண்ட கூந்தல் வைத்திருக்கின்றாள். ஒற்றைச்சடை பின்னல் இட்டு பிட்டம்வரை ஆடிக்கொண்டிருந்தது அவளின் கூந்தல். அடிக்கிற காற்றில் உடைகள் கூட அசையவில்லை, ஆனால் அவளின் சடை அசைந்து கொண்டே இருந்தது. அவ்வளவு மெல்லிய சடை.
எதுக்கு இன்னமும் இந்த வால் போன்ற கூந்தலை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டதிற்கு, கணவர் வெட்ட விட மாட்டேன் என்கிறார், என்ன செய்ய! என்கிறாள். அடப்பாவமே இன்னமுமா? நீண்ட கூந்தலால் என்ன வந்து விடப்போகிறதோ தெரியவில்லை.!
என்ன செண்டிமெண்டலா இருக்கும்..!!? இப்படி எலி வால் போல் இருக்கும் கூந்தலை விட மொட்டைத்தலையே மேல்.
நீண்ட அடர்ந்த கூந்தலை வைத்திருக்கும் போது, விதவிதமாக தலைவாரிக்கொள்வோம். ஒரு அனுபவம் பின்நோக்கி.....
இரட்டைப்பின்னல்
பூராண் சடை - இதை நாமே பின்ன முடியாது. யாராவது பின்னி விட்டால்தான் உண்டு.
சடையை ரிப்பன் கொண்டு மடித்துக்கட்டுவது
நன்றாக இழுத்து, பின்னே ஒரு ஒற்றைக்கொம்பு கட்டி, அதை சடையாக்கிக்கொண்டு பின்னி ரிப்பன் கட்டுவது.
நீண்ட சடை பின்னிய பிறகு அதை கொண்டையாகக் கட்டிக்கொள்வது
இரண்டு சடை பின்னி, வலதுபுற சடையை இடதுபுற சடையில் ரிப்பன் கொண்டு கட்டுவது. இடதுபுற சடையை வலது புற சடையில் கட்டுவது.
இரண்டு சடை பின்னி இறுதியில் இரண்டையும் சேர்த்து ஒன்றாகக்கட்டிக்கொள்வது.
முடியை லூஸ் செய்து, பாதியிலிருந்து சடை பின்னிக்கொள்வது. (80’ஸ் நடிகைகள் போல்..)
கோணல் சடை - முடியைச்சீவி ஒரு பக்கமாக வைத்து சடை பின்னிக்கொள்வது.
ரெண்டு கொம்பு - அதில் சடை.
தலையிலேயே வலதுபுறமாகப்பின்னிக்கொண்டு பிறகு இடதுபுறமாகக் கொண்டு வருவது.
நீண்ட சடை பின்னி, ரப்பர், ரிப்பன் எதுவும் பயன்படுத்தாமல் ஒரு முடிச்சு போட்டுக்கொள்வது.
எல்லாவற்றிலும் சடை இருக்கவேண்டும். தலைவிரி கோலமாக நடந்தால், கிழவி வெற்றிலை உரலை நம்மீது வீசும். (முன்பு நாங்கள் கூட்டுக்குடும்ப வாசிகள்)

Enlargement procedure - News View
New Jersey
A man who is only 22year old, seeking for penile enlargement procedure, treatment went wrong and causes him death the next day.
The lady who has no midecal licence or training, administered a silicone shot to the man's penis end up tragedy.
His death was ruled as homicide after an investigation and a medical examiner's determination that he died of a silicone embolism.
Thank you THE STAR news paper.

புதன், செப்டம்பர் 12, 2012
என் நிலை
என் இடத்திற்கு வா
இந்த நிலை புரியும்
இடம் என்பது?
வயது
இதையும்
தாண்டிப்போனவர்கள்
என் இடத்திற்கு
இன்னும் பின்னே இருப்பவர்களும்
இங்கே வரலாம்
இந்த நிலை புரியும்
இடம் என்பது?
வயது
இதையும்
தாண்டிப்போனவர்கள்
என் இடத்திற்கு
இன்னும் பின்னே இருப்பவர்களும்
இங்கே வரலாம்
இங்கே என்பது?
நிலை
இதையும் தாண்டி
இன்னும் முன்னே இருப்பவர்கள்
முன்னும் பின்னும்
இருக்கலாம்
அங்கேயே இருங்கள்
அங்கே என்பது?
??
நிலை
இதையும் தாண்டி
இன்னும் முன்னே இருப்பவர்கள்
முன்னும் பின்னும்
இருக்கலாம்
அங்கேயே இருங்கள்
அங்கே என்பது?
??
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
இன்று பாரதியின் நினைவுநாள்
நெஞ்சினில் உரமில்லாமல், நேர்மையில்லாமல், கருத்துப்பகிர திறனில்லாமல், வாய் சொல்லில் வீரராகி, வஞ்சனை செய்துகொண்டிருப்பவர்களுக்கு, இந்த கவிதை சமர்ப்பனம்.
பாரதியார்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! – கிளியே!
நாளில் மறப்பா ரடீ
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? – கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! – கிளியே!
பேசிப் பயனென் னடீ
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் – கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! – கிளியே!
செய்வ தறியா ரடீ!
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் – கிளியே!
நம்புத லற்றா ரடீ!
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் – கிளியே
பேணி யிருந்தா ரடீ!
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் – கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ – கிளியே
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் – கிளியே
வாழத் தகுதி யுண்டோ ?
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! – கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! – கிளியே!
பாமர ரேதறி வார்!
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
சிறுமை யடைவா ரடீ!
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா – கிளியே!
வந்தே மாதர மென்பார்!
நன்றி, எல்.கே.

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நன்றியும் கூட, இதையொட்டி என் சிந்தனையை மீண்டும் தூண்டியமைக்கு.
புனைவுகளில் ஆய்வு என்பது, ஏற்கனவே யாரோ ஒருவர் எழுதிய ஆய்வுக்களஞ்சியத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அங்கேயும் இங்கேயும் கோடிட்டு, அக்கருத்தினை கோர்வையாக்கிக்கொண்டு, அதனை தமது படைப்புகளில் மிக லாவகமாகப் புகுத்திக்கொள்வதில் இல்லை ஆய்வு! அதற்குப்பெயர் படித்ததைப் பகிர்வது அல்லது தொகுப்பு. படைப்பின் இறுதியிலும் அப்படித்தான் போடுக்கொள்ளவும் வேண்டும், அதுவே முறை. காரணம், சம்பந்தப்பட்ட இவ்வாய்வுக் களஞ்சியதை, பலர் ஏற்கனவே படித்த்திருக்க நேர்ந்திருந்தால், புதிதாகப் பிறந்திருக்கும் இப்படைப்பாகப்பட்டதன் நிலை, ஆலையில் இட்ட கரும்புச் சக்கையின் நிலைதான். ஆக, ஆய்வு என்று, நான் அன்று குறிப்பிட்டது இப்படியல்ல; அது தேடலில் பிறப்பது. தேடுதல் எப்படியிருக்கவேண்டுமென்றால், கண்டதைப் படிக்கும் போது, அதிலிருக்கும் விஷயங்கள் நமக்குள் சில பொறிகளைத் தட்டிச்செல்லும், அப்போது நம் மனது விளைநிலமாகும், அதை எழுத எத்தனிக்கும்போது அது அற்புதப் படைப்பாக மாறுதல் பெற்று, நமது அசல் கருத்தாக நிலைநின்று, பின்பு அதுவே சொந்த ஆய்வாகவும் பரிணமிக்கின்றது. இதற்கு பன்மொழி வாசிப்புத்திறன் அவசியம், இது எளிதில் யாருக்கும் வந்துவிடாது. அதனால்தான், எழுத்தாளர் என்கிற அந்தஸ்த்து அவ்வளவு சுலபமல்ல என்கிற என் கருத்தில் நான் மிகவும் பிடிவாதமாக இருக்கின்றேன்.
சரி, விடுங்கள் சகோதரி, எழுத்தாளர்களுக்கே இதெல்லாம் புரியாத போது, சாதரண வாசக்க்குழுவில் இருக்கும் நமக்கு தெரியாதிருப்பது ஒன்றும் பெரிய குறையல்லவே.
இன்னொரு விளக்கம் - படைப்புகள் இங்கே, இந்த இதழில் வந்துள்ளது, அங்கே, அந்த இதழில் வந்துள்ளது என்பதெல்லாம் சாதனையாக்க் கொள்ள முடியாது சகோதரி. தமிழில் எழுதுபவர்கள் உலகளவில் கணிசமாகக் குறைந்துக்கொண்டே வரும் இக்காலக்கட்ட்த்தில், சரியான முறையில் தமிழில் எழுதத் தெரிந்தாலே போதுமானது, வாய்ப்புகள் கதவைத்தட்டும். அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி, ஐய்ரோப்பிய நாடாக இருந்தாலும் சரி, தமிழ் ஆளுமை உள்ளவர்கள் எல்லா ஏடுகளிலும் பேர்போடுகிறார்கள். இங்குள்ள பல எழுத்தாளர்கள் உலகமுழுக்க உள்ள இணைய ஏடுகளை ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பரந்த வாசிப்புப் பழக்கமுள்ளவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. உலகம் சுறுங்கிவிட்டது. வாய்ப்புகள் காலடியில்.
அடுத்து சகோதரி பாக்கியம் அவர்களுக்கு;
சகோதரி, நீங்கள் ஒரு பிரபல எழுத்தாளர். உங்களின் பார்வை இப்படி அறைகுறையாகவும் குறுகிய வட்டத்தில் இருப்பதை நினைத்து நான் வேதனைப் படுகின்றேன். உங்களின் விவேகமற்ற, ஆவேசமான கருத்துகள் என்னை நிஜமாலுமே வியப்பில் ஆழ்த்தியது. நீங்கள் எழுதிய அந்த கண்டனக்கடித்தை வரிக்கு வரி கோடிக்காட்டி பதில் சொல்ல முடியும் என்னால். இருப்பினும், சில விவரங்களை மட்டும் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
பத்திரிகையில் வந்த எனது நேர்காணலை, பல பெண் எழுத்தாளர்களின் நிர்பந்த்த்தால் படிக்கநேர்ந்த்தாகச் சொல்லியுள்ளீர்களே, அப்படியென்றால், பெண் படைப்பாளிகளின் பிரதிநிதியாகத்திகழும் உங்களுக்கு இயற்கையிலேயே வாசிப்பில் ஆர்வமேயில்லை.! வாசிக்கச்சொன்னால்தான் வாசிப்பீர்கள்! இல்லையென்றால் மற்றவர்களின் எழுத்து உங்களுக்கு ஒரு பொருட்டேயல்ல. அப்படித்தானே.!? இவர்கள் யார், ஒரு சாதாரண வாசகிகள், அப்படி என்ன எழுதிவிடப்போகிறார்கள், என்கிற அலட்சியப்போக்குதான், உங்களின் பரந்த வாசிப்பிற்குத் தடை போடுகிறதென்று நினைக்கின்றேன். இது உங்களின் பிரச்சனை மட்டுமல்ல, யாரெல்லாம் தம்மை ஒரு பிரபல இலக்கியவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்த வியாதி உண்டு. அவர்களுக்கு, அவர்களின் எழுத்தைத்தவிர மற்றவை எல்லாம் துச்சமே.!
சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் குறிப்பிட்ட ஒரு கருத்தினை `ஆண்களை எதிர்ப்பதுதான் பெண்ணியம் என்பதும் படு நகைச்சுவை. விவாகரத்து செய்துவிட்ட எல்லா பெண்களும் ஒன்று திரண்டு, இரவு பகல் பாராமல் பெண்ணியம் பேசுவதால், பெண்களின் வளர்ச்சி உச்சத்தை அடைந்துமென்று நினைப்பதும் அதைவிட நகைச்சுவை.. ' மீண்டும் எனக்கே எழுதிக்காட்டி, அக்கருத்தால் எனக்கு நகைச்சுவை என்று நான் சொன்னதைக்கூட சரியாகப்புரிந்துக்கொள்ளாமல், அவைகளை நான் ஆமோதிப்பதாக நினைத்துக்கொண்டு, அதை நீங்கள் வெட்டிப்பேசுவதைப்போல் வெட்டியாக உங்களின் கருத்தினை வைத்திருக்கின்றீர்களே.
நான் சொல்லவந்தது - பல பெண்கள், இக்கருத்தைத்தான் `பெண்ணியம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள், அதனால்தான் பல குடும்பங்களில் தந்தையை மதிக்காமல், அண்ணன் தம்பிகளை மதிக்காமல், கணவன் மார்களை மதிக்காமல் குடும்பம் குடும்பமாகவே இல்லாமல் சிதறிச் சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. அது தவறு. பெண்ணியம் என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட்து. பெண் பெண்ணாகவே இருப்பதுதான் பெண்ணியம். போராட்ட குணமெல்லாம் பெண்ணியம் ஆகாது என்பதுதான் இக்காலச் சிந்தனைக்கு பொருந்தும்.
நீங்கள் குறிப்பிட்ட பெண்ணியம் என்கிற கருத்து, பெண்கள் அடிமைப்பட்டு வீட்டில் அடைக்கப்பட்ட காலகட்ட்த்தின் போது சொல்லப்பட்டது. பாரதியாரும், பாரதிதாசனும், பெரியாரும், ஓஷோவும் சொன்னவைகள்தான் அவை. இப்போ காலம் மாறிப்போச்சு, பெண்களின் வளர்ச்சியாகப்பட்டது இல்லறம் செழிக்க வழிவகுத்தல் என்பதுவே அவசியமாகிறது. இன்றைய பெண்ணியம் - பெண் என்பவள், குடும்பச் சூழலை, கணவனின் உதவியோடு, சகிப்புத்தன்மையுடன், அவனுக்குத் தோள்கொடுத்து குடும்பத்தை அழகிய ந்நதவனமாக மாற்றக்கூடிய ஆற்றலில்தான் அடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பத்து திருமணங்களில் ஏழு திருமணங்கள் தோல்வியில் முடியுறுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நிலைமை இப்படியே போனால் குடும்பங்கள் இருக்காது, குடும்பம் இல்லையென்றால் கலாச்சாரம் பாழ். கலாச்சாரம் பாழ் என்றால் நாட்டின் நிலவரம் நிலைக்குத்தும். ஆக பெண்கள் குடும்ப நலனுக்குக்காகப் பாடுபடுவதுவே இன்றைய பெண்ணியம்.
பெண்கள் நாட்டை ஆளுகிற இக்காலக்கட்டதில், பெண்ணியத்திற்கு நீங்கள் கொடுத்திருந்த கருத்து ஏற்புடையதன்று. இன்றைய சூழலில், எந்த பெண்ணும் படிப்பு வேண்டி, வேலை வேண்டி, உரிமை வேண்டி போர்கொடியெல்லாம் பிடிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. உலகமுழுக்க பல சட்டங்கள் பெண்களுக்கென்றே அமல்படுத்தப்பட்டு விட்டன. `கோட்டா சிஸ்டம்’ வழி எல்லா வாய்ப்புகளும் எல்லோருக்கும் சம்ம். பல பல்கலைக்கழகங்களில் பெரும்பாலும் பெண்களின் ராஜ்ஜியம்தான். இதற்கு அப்பாலும், வெறுமனே பெண்ணியம் பேசி போர்க்கொடி தூக்குவதென்பது பெண்களின் தன்னம்பிகையின்மையையே காட்டும்.. குடும்பத்தை முறையாக வழிவகுக்கத்தெரியாமல், எல்லாவற்றிற்கும் சட்டதிட்டங்கள் இருப்பதைக் கூட சரியாகப்புரிந்து வைத்துக்கொள்ளாமல், பெண்ணியம் என்கிற இந்த ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்துவது சரியல்லவே.
இனிமேலாவது சுயமாக வாசித்துவிட்டு கருத்துதனை தெரிவியுங்கள். உங்களின் ஜால்ராக்களை வாசிக்கச்சொல்லி கருத்துகளை எழுதினால்
இப்படித்தான் மொட்டைத்தலைக்கும் முழங்காலும் முடிச்சுப்போட்ட விடயங்களை பொதுவில் வைக்கவேண்டிவரும். தலைசிறந்த எழுத்தாளர் முத்திரை உங்களின் கருத்துகளில் அருவியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது சகோதரி.
எனது நேர்க்காணல் என்பது, நானே வலியச் சென்று கேட்டுப்பெற்றதல்ல. அதுதானாகவே என்னைத் தேடி வந்த ஓர் அரிய வாய்ப்பு. அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, எனது தனிப்பட்ட கருத்தினைத்தான் பொதுவில் வைத்தேனேயொழிய எந்த `பிரபல’ முத்திரை குத்தப்பட்ட எழுத்தாளரையும் சாடவில்லை. அது என் நோக்கமும் அல்ல. அதைப்பிடித்துக்கொண்டு ஆவேஷம் பொங்க, வாசகியான என்னை கீழ் நிலைக்கு இட்டுச்சென்றிருப்பது உங்களின் பக்குவமின்மையையே காட்டுகிறது. இலக்கியவாதிகளுக்கு ஆதங்கம் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் வயிற்றெரிச்சலும் காழ்ப்புணர்ச்சியும் கூடவே கூடாது.
உங்களுக்கு நன்றாக வருவது சிறுகதை மற்றும் தொடர்கதை, அதிலேயே கவனம் செலுத்துங்கள். விமர்சனம் பதிலடி போன்றவற்றிற்கு சுயசிந்தனை அவசியம். அது உணர்ச்சிவசப்படாமல் கையாளப்படவேண்டிய ஒரு களம். சமூதாய அக்கறை உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். வேடம் தரிப்பவர்கள் நுழைந்தால் முகத்திரை கிழிக்கப்படுவது திண்ணம்.
இறுதியாக என் கருத்துகள் அனைத்தும் குப்பை என்று நீங்கள் கூறியும், உங்களின் கருத்திற்கும் அதே தலைப்பை வைத்து, அதையும் பிரசுரித்து, பத்திரிகை தர்ம்ம் காக்கும் பத்திரிகை ஆசிரியர்களின் சேவை வாழ்க வளர்க. நன்றி சார்.
சனி, செப்டம்பர் 08, 2012
முகநூல் - FACEBOOK
எல்லோரும் எதாவதொரு வகையில் நற்குணங்களை நம்மில் விதைத்த வண்ணமாகவே இருக்கின்றார்கள்.
நல்லனவற்றைச் செய்கிற போது, அதையே போதிப்பது.
தீயனவற்றைச் செய்கிற போது, அப்படி நாம் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதை போதிப்பது
ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருக்கும் போது மௌனத்தையும் திடகாத்திரத்தையும் போதிப்பது -
இப்படியே இருந்தால் எவற்றையும் யாரும் போதிக்கத் தேவையே இல்லை, நாமே கற்றுக்கொள்ளலாம் குரு இல்லாமல்.
எங்குமே கிடைக்காத அரிய போதனைகள் இவை..
யார் யாரோ என்னன்னமோ சொல்கிறார்கள் - ஆனால் நான் மட்டும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கின்றேன் இங்கே.
முகநூல் கூட போதிமரமே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)