செவ்வாய், டிசம்பர் 06, 2011

வெகுமதி கலாச்சாரம்.

குட் மார்னிங் விஜி .

வெரி குட் மார்னிங் மிஸ்டர் கூ..

சில முக்கிய பிரமுகர்கள் வர வேண்டியுள்ளது, எத்தனை பேர் என்று சரியாகத்தெரியவில்லை. வந்தவுடன் முதலில் எத்தனை பேர் உள்ளனர் என்பதனை அழைத்துத் தெரிவித்துவிடு. மீட்டிங் அறையைப் பயன்படுத்த அது உதவியாக இருக்கலாம்...

யெஸ் சார்.

நம்முடைய டீலர்ஸ்களில் மிக பிரபலமானவர்கள் இவர்கள். தலைநகரில் இவர்களின் நிறுவனங்கள் தான் நமது பொருட்களை மிக அதிகமாக விற்பனை செய்துவருகிறார்கள். வந்தவுடன் அமரச்செய், எல்லோருக்கும் காப்பி கலக்கிக்கொடு.

யெஸ் மிஸ்டர் கூ.

இங்கே உன் முன்னே இருக்கும் மொனிட்டரில், வெல்கம் என அவர்களின் கம்பனி பெயரோடு அதன் நிருவாகியின் பெயரையும் சேர்த்து ஸ்க்ரீனில் போட்டு விடு.. கொஞ்சம் அழகாக பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கட்டும்.

யா, ஷுவர்..

அந்தப் பெரிய டீ வியில், அவர்களின் கம்பனி சம்பந்தப்பட்ட விளம்பர சீடி ஒன்று நம்ம மெட்ச்சண்டைஸரிடம் இருக்கிறது, அதையும் ஓடவிடு. ஷோ ரூம்மை தூய்மைப்படுத்தச் சொல், air freshener செய்யவும் ஏற்பாடு செய்..

ஒகே பாஸ்..

பிறகு, மதிய உணவும் ஏற்பாடு செய்யவேண்டும். கண்டீனில் ஆர்டர் கொடு, அவர்கள் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு பிறகு ஆடர் செய். உணவில் காரம்  வேண்டாம் என்பதனைச் சொல்லி விடு. சோலிட் ஃப்பூட் இருக்கணும். டிரிங்ஸ் மினரல் வட்டர் போதும்.

நிச்சயமாக ஏற்பாடு செய்கிறேன்..

எல்லா டிப்பார்ட்மெண்ட் ஹெட்களுக்கும் ஒரு மெயில் அனுப்பி இவர்களின் வருகைய அறிவித்து விடு. அவர்களின் எண்ணிக்கையையும் அந்த உணவு லிஸ்டில் சேர்த்து விடு.

ஹ்ம்ம்..

அதில் ஒருவர், பெயர் அப்புறம் சொல்றேன்,  நாளைக்குக் காலையிலே ஃபிலைட்,  இன்று இரவு தங்குவதற்கு சன்வே ஒட்டலில் அறை ஒன்றை பதிவு செய்யவேண்டும்., முதல் வகுப்பு அறை. அதன் பிறகு அவரை அழைத்துச்செல்ல ஒரு டாக்ஸி. இன்று மாலை இங்கிருந்து ஓட்டலுக்கும், பிறகு நாளை காலை ஓட்டலில் இருந்து ஏர்ஃபோர்ட்டிற்கும் செல்லவேண்டும்.  அதற்கும் நாமே ஏற்பாடு செய்யவேண்டும். டாக்ஸி தூய்மையாக இருப்பதை கவனத்தில் கொள்.

ஓ, ஷுவர்..

இப்போது எனக்கு ஒரு அவசர மீட்டிங் உள்ளது, அங்கே போகிறேன். கொஞ்ச நேரமாகலாம். அவர்கள் வந்தவுடன் என் கைப்பேசிக்கு அழை.

ஒகே போஸ்.

இது என் வேலையின் ஒரு பகுதி இவை. இவற்றை சரியாக, மனத்திருப்தி ஏற்படும் படி செய்து இருந்தால், எனக்கு ஒரு ரோஜா மலர்கொத்து அனுப்பி வைப்பார்கள், எங்கிருந்தோ வரும். ஒரு முறை ஒரு மிகப்பெரிய ஹெம்பர் (திண்பண்டங்கள் அலங்கரிக்கப்பட்ட கூடை) வந்திருந்தது, எனது பெயரிட்டு. இன்னமும் தெரியாது அதை யார் அனுப்பியது என்று..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக