வியாழன், பிப்ரவரி 23, 2012

தொடரும்

எச்சரிக்கை

இந்த உணர்வுகள்
தொடராது என்பதால்
வார்தைகள்
மிக கவனமாக
கோர்க்கப்படுகின்றன

எச்சரிக்கை மனம்
சதா எச்சரித்துக்கொண்டே..

பதில்கள்
யார் அறிவாளியாக
இருந்தால் என்ன!?
நான் முட்டாளாய்
உங்களை விட
மகிழ்ச்சியாய் இருக்கிறேன்..

கேள்விகள் கேட்கப்படும் போது
வெட்டி அரட்டைகள்
ஆரம்பமாகின்றன பதில்களோடு..

பைத்தியக்கார..
எல்லா பைத்தியக்கார
செய்கைகளின் பின்னால்

ஒரு மனநோயாளி
உலாவுகிறான்(ள்)...
தாம் ஒரு மனநோயாளியே அல்ல
என்கிற சிந்தனையில்..

நீ வெறுப்பதால்
நானும் அவனைத் திட்டிவைக்கிறேன்
எனக்கு வெறுப்பில்லை
என்ற போதிலும்......

பொறுப்பு
அழகான.. அழகில்லா
எல்லா பெண்களின் பின்னால்
எதாவதொரு பெயரில்
அவன் இருப்பான்
பெண்மையின் பாதுகாவலனாக
பொறுப்பு புல்லரிக்கிறது.
எனக்கு பொறாமையில்லை,
அன்பு பகிரப்படுவதில்
அவ்வளவாக இஷ்டமில்லை.

மௌனம்
எல்லா வக்கிரங்களுக்கும்
தமிழிலே பதில் சொல்லி
அலுத்த்துவிட்ட போது
வேறு ஒரு மொழியை கற்றுக்கொண்டேன்..
மௌனம்

ரகசிய மொழி
நீண்ட நாள்களுக்குப் பிறகு
ஒரு அழைப்பு
நலம் விசாரிக்கவில்லை
இருவரிடமும் ஒரே கேள்வி
சொல்லிவைத்தாட்போல..
என்ன கோபம் என் மேல்?”...

ரகசிய மொழியால்
அழைப்பேன்..
அவர் என்பேன்
அவரை
அவன் என்பேன்
அவனை..!

தியாகமின்மை
எங்கள் வயிறுக்கு
ஒரு மொடக்கு கஞ்சி மட்டும் போதும்.
மற்றவர்களுக்காகா எல்லாவற்றையும்
அறுத்துக்கொண்டிருக்கிறோம்
நறுக்கிக்கொண்டிருக்கிறோம்
பெண்கள் நாங்கள்...

வித்தியாசம்
கணவருக்கு
ஒரு ரோஜா கொடுத்து
காதலர் தினத்தை
வித்தியாசமாக கொண்டாடினேன்
இந்த வருடம்..

நகரவாழ்க்கை
முட்டாய்
கதவுதுணி
ஐஸ்கோசோங்
கொட்டாபுலி
போங்கு எம்.ஜி
கட்டகரடி
கருவுபிள்ளை
பிஸ்கோத்து
ஊளைமூக்கி
கவிச்சி
கோடாலி
குதிரைமுட்டை
தாய்பால்
இதில் ஒருவரை
இன்று நான் சந்தித்தேன்
திரு நடராஜ் என்று பெயரிட்டு...

தொடரும்
வாசித்து வைக்கப்பட்ட
உனது புத்தகத்தை
மீண்டும் வாசிக்கிறேன்
இம்முறை கதைக்காக அல்ல
உன் மேல் உள்ள காதலுக்காக...

சாகும் வரை தொடரும்
உண்மையற்ற சுவாரிஸ்யம்
ஆபாசமாக.!

2 கருத்துகள்:

 1. எங்கள் வயிறுக்கு
  ஒரு மொடக்கு கஞ்சி மட்டும் போதும்.
  மற்றவர்களுக்காகா எல்லாவற்றையும்
  அறுத்துக்கொண்டிருக்கிறோம்
  நறுக்கிக்கொண்டிருக்கிறோம்
  பெண்கள் நாங்கள்... ////
  ///
  ///
  அறுத்து போடுங்கள் எது தடுக்கிறதோ அதை
  நறுக்கி போடுங்கள் எது தடுக்கிறதோ அதை

  பதிலளிநீக்கு
 2. தமிழ்ராஜா... சரி அப்படியே ஆகட்டும்.

  பதிலளிநீக்கு