வெள்ளி, ஜூலை 27, 2012

தட்டலும் திட்டலும்

ஒட்டாத போது
ஓயாமல் வருகிறாய்
ஒட்டியவுடன்
ஓடிவிடுகிறாய்

சரி, எட்டிச்செல்லலாம்
என்றால்
இதயவாசலை
மீண்டும் தட்டிச்செல்கிறாய்

தட்டும் போதெல்லாம்
திறந்துக் கொ(ல்)ள்கிறது
பூட்டப்படாத என் வாசல்

சாவியை நான்
பூட்டும்வரை
உன் தட்டலுக்கு
திறக்கும் என் வாசல்

12 கருத்துகள்:

  1. Nice poem. Mudhal varugai. Innum sandhippom. Appadiye namma thalaththukkum konjam vandhuttup pogalaame? http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க.. அழைப்பு ஒகே’ங்க ஆனால் உங்க ப்ளாக்கிற்குப் போகமுடியவில்லையே ஏன்?

      நீக்கு
  2. விட்டு விலகிச்செல்ல செல்ல அன்பு கூடுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். அனுபவப்பட்டவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். :)) நன்றி விச்சு

      நீக்கு
  3. தட்டும் போதெல்லாம்
    திறந்துக் கொ(ல்)ள்கிறது
    பூட்டப்படாத என் வாசல்//

    மனம் கவர்ந்த அருமையான வரிகள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார், இந்த கவிதையை எங்க ஊர் எழுத்தாளர் ஒருவர் படித்து விட்டு, ஆபாசம் என்கிறார். அவரின் பார்வையில் என்ன தென்பட்டடதோ.!!?? நன்றி வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும்..

      நீக்கு