திங்கள், பிப்ரவரி 14, 2011

காதலர் தினம்

இன்றைய பொழுதில் 
உன்னிடம் 
கேட்க மாட்டேன் 
ஒரு 
பூ  

நீ எனக்கு 
எப்போதும் 
ஒரு 
ரோஜா

வியாழன், டிசம்பர் 02, 2010

மீண்டும் எதிர்ப்பார்ப்பேன்

எதிர்ப்பார்ப்புகள் வேண்டாம் என்கிற முழக்கத்தோடு..
நித்தமும் எதிர்ப்பார்ப்புகளை நோக்கியே பயணிக்கும்...
நம் உறவு

திங்கள், நவம்பர் 29, 2010

சாமிகளும் சாத்தானுங்களும்


 
கூடிய விரைவில்
வாழ்விலும்
அனுபவத்திலும்
என்றுமே..
உணர்ந்திராத
ஒர்
உணர்வைவும்
வலியையும்
விரக்தியையும்
தாள, மீள முடியாத
தனிமையையும்
கொடுக்கக் காத்திருக்கும்............
சில
வேதங்களும்,
வேதாளங்களும்
சாமிகளும்
சாத்தானுங்களும்.





பிராப்தம்


கிடைத்ததெல்லாம்
வேண்டியதுதானா?

தெரியவில்லை...!

நீ கொடுத்ததெல்லாம்...
எனக்கு வேண்டியனவே!


வேண்டுதல்
இல்லாமலேயே!

ஞாயிறு, நவம்பர் 28, 2010

வேள்வி


உன்
கேள்விகளுக்கெல்லாம்
பதில் சொன்னால்...
...
பதிலுக்கு
நான்
கேள்வியாவேன்....?

கவிதையில்


பிடித்தவற்றில் என்னைத்தேடுவேன் பிடிக்காதவற்றில்
...
உன்னைத்தேடுவேன்..!
சாதகமாக இருந்தால் என்னைத்தேடுவேன் பாதகமாக இருந்தால் உன்னைத்தேடுவேன்..!
போற்றினால் என்னைத்தேடுவேன் தூற்றினால் உன்னைத்தேடுவேன்..!
காதல் இருந்தால் நம்மைத்தேடுவேன் சாதல் இருந்தால்...........
உனக்கா இருப்பேன்.