வெள்ளி, டிசம்பர் 09, 2011

புத்தகங்களின் நிலை

ஒரு சிந்தனை:

நான் சிறுவயதிலிருந்து புத்தகங்களைச் சேகரித்து வருகிறேன். (படிக்கிறேன் என்றால் பொய்யாயிடும்) அதனால் பல விதமான புத்தகங்களைச் சேகரிப்பது என் பொழுதுபோக்கு. ஒரு அலமாரியே நிறைந்து விட்டது. இன்னும் இன்னும் நிறைய, கூடிய விரைவில் இன்னோரு அலமாரியைக் கேட்டாலும் வாங்கிக்கொடுப்பார் என் கணவர். 

ஒரு நாள் என் பிள்ளைகளிடம், நான் இல்லையென்றால் இந்த புத்தகங்களை எல்லாம் என்ன செய்வீர்கள்? என்றபோது, எங்களுக்கு எதற்கு? எங்களின் படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்களையே ஆயுள் முழுக்க வாசிக்கவேண்டியிருக்கிறது.!! இதில் நீங்கள் மூட்டைக்கட்டி வைத்திருக்கும் இந்த புத்தகங்களை எங்கே வாசிப்பது?? சேர்ந்தாட்போல் இருவரும் ஒரே மாதிரியான பதிலைச்சொன்னார்கள்.

இது உள்ளபடியே யோசிக்கவைத்த ஒரு சிந்தனை, அன்று.

நாமெல்லாம் உயில் எழுதுவதைபோல், இந்த புத்தகங்களையெல்லாம் என்ன செய்யவேண்டுமென்று எழுதி வைத்துவிடுவது நன்மை என்று தோன்றுகிறது, ஏனென்றால், இப்படிப் பொத்திப்பொத்திப் பாதுகாக்கின்ற புத்தகங்கள், அதனின் அருமை தெரியாத நம் சுற்றங்கள் ஒரு நாள், அவைகளை எடுத்து பழைய காகிதம் வாங்குவரிடம் கொடுத்துவிட்டால்....!!?

என்னுடைய புத்தகங்கள் அனைத்தையும், நூல்நிலையங்கள் எடுத்துக்கொள்ளட்டும்.


ஆனால், இவைகளை நான் வாசிக்கப்போகிறேன் என்று, எனது உடன்பிறப்புகள் வந்து கைகளை வைத்தால் ‘விஷப்பாம்பு’ கொத்த வேண்டுமென்று வேண்டுகிறேன். கொஞ்சங்கூட ரசனையே இல்லாத கூர்கெட்ட ஜென்மங்கள் என் உடன்பிறப்புகள்.

இன்று அசோகமித்திரன் அவர்களின் புத்தகமொன்றினை வாசித்தேன்.  அப்போது இதே கேள்வியை அவரும் கேட்டிருந்தார்.! பெரிய எழுத்தாளர் அசோகமித்திரன்.

domestic violence

பில் கட்டாமல்,
நெட் கட் ஆகியிருக்கு
கரண்ட்’டும் போயிருக்கு
தண்ணீர் பஞ்சமும் வந்திருக்கு
தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கு
பில் கட்ட தாமதாமாகி, பல எச்சரிக்கைக் கடிதங்கள்
இன்னமும் குவிந்தவண்ணமாக..!

உப்பு, புளி, மிளகாய், அரிசி, பருப்பு இல்லாமல் போய்
சமயற்கட்டுக்கு நான் ’கட்’ விட்டதேயில்லை
இருப்பினும், எனக்குத்தான் பொறுப்பில்லை என
ஒயாமல் நடக்கும் உள்குத்து வேலை.!

நேரம்

முகப்பரு எடுக்க
நகங்களை வெட்ட
புருவத்தை சரி செய்ய
மை தீட்ட
பல வர்ணங்களில் உதட்டுச்சாயம் பூசி அழகு பார்க்க
கண்ணாடியில் கேசத்தைச் சரி செய்ய
பெடிக்ஃயோ மெனிஃக்யோ செய்ய
லோஃஷன் போட
அரட்டை அடிக்க
இசை கேட்க
பத்திரிக்கை படிக்க

எனக்கு ஆபிஸ்தான் சிறந்த இடம்.


புதன், டிசம்பர் 07, 2011

Shepherd Pie

எனது இன்றைய உணவு Shepherd Pie. என் தோழி செய்து அனுப்பியிருந்தாள்.
இதுவரையிலும் சாப்பிட்டதில்லை. இன்றுதான் முதல் முறையாக சாப்பிட்டுப்பார்த்தேன். 

அது ஆஸ்ரேலியாவின் ஏழைகளின் உணவாம். தோழிதான் சொன்னாள். ஆனால் இங்கு மலேசியாவில் அதன் விலை அதிகம். பொதுவாக வெஸ்டன் கஃப்பேக்களில் விற்கப்படும் உணவு அது.

“சாப்பிடல. தொலைச்சுப்புடுவேன் மவளே’’ என்கிற மிரட்டல் உத்தரவு வேறு.

மிக மிக ஆரோக்கியமான உணவு அது. ( எனக்குத்தான் பிடிக்கவில்லை. இறங்க மாட்டேன் என்கிறது). முதல் முறையாதலால் இந்த சிக்கல் போலும். பழகப்பழக சரியாயிடும்.


இதற்குத் தேவையான பொருட்கள்

கோழி இறைச்சியை எலும்பு இல்லாமல் பிரித்து, கொந்திகொள்ளவும்
பெரிய வெங்காயம் - நறுக்கிக்கொள்ளவும்
கொஞ்சம் சோளமாவு

மெஷ் பெட்டேட்டோ செய்ய:-
உருலைக்கிழங்கை கொஞ்சம் உப்புடன் நன்கு வேகவைத்து, மாவுபோல் இடித்துக்கொள்ளவும் (mash mixer) இருந்தால் இன்னும் சுலபமாம். கொஞ்சம் பட்டர் அல்லது பால் சுவைக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.

உப்பு,
ஆலிவ் ஆயில். (அதில் தான் எல்லா சமையலும் செய்வாள் என் தோழி)

செய்யும் முறை:-

சட்டியில் எண்ணெய் ஊற்றி
வெங்காயத்தைப்போட்டு வதக்கவேண்டும், பிறகு சோளமாவு. சோளமாவைப்போட்டவுடன் கொஞ்சம் கட்டியாக வரும் அப்போது கோழியையும் சேர்த்து கிண்ட வேண்டும், கோழியில் உள்ள நீர் வெளியாகி கட்டியான அந்த திரவத்தை மிருதுவாக்கும் அதனால் நீர் உற்றத்தேவையில்லை. லேசாக வெந்தவுடன் வெள்ளைமெளுகுத்தூள் தூவி ஆற விட்டு, மஷ் செய்த உருலைக்கிழங்கை அலுமினியம் தட்டில் வைத்து, இந்தக் கோழிக்கலவையை அதன் மேல் வைத்து, அந்த உருலைக்கிழங்கால் நாலாப்பகமும் மூடிவிடும் படி செய்து, அஃவனில் வைத்து, ஃப்ரௌனாக வரும் வரை கிரில்ல் செய்யவும்.  (ufff)

அஃவன் இல்லதவர்கள், அலுமினிய ஃபோயிலில்(foil)  சுருட்டி, விறகு அடுப்பில் போடலாம்! (இது என் ஐடியா)

சுடச்சுட சாப்பிட அருமையாம், அதுவும் வெளியே மழை பெய்துக்கொண்டிருக்கும் போது, ஜன்னல் ஓரமாக அந்த மழையை ரசித்துக்கொண்டு ஒரு கருப்புக்காப்பியை சுவைத்த வண்ணமாக சாப்பிட்டால் சும்மா அப்படித்தான் இருக்குமாம் ( :P)

கவனத்தில் கொள்ளவும் இது ஏழைகளின் உணவு (ஐரோப்பாவில்)

shepherd - என்றால் ஆட்டிடையன், கால்நடை மேய்ப்பாளன் - ஏழை
pie - என்றால், ஒரு வகை உணவு.

shepherd pie என்றால் ஆட்டிடையன், கால்நடை மேய்ப்பாளன் உண்ணும் உணவு.

இதை நிறைய வழிகளில் செய்துப்பார்க்கலாம், நம்ம இட்லி பலமாதிரியாக மாறியது போல்.
எனக்குக்கிடைத்தது இந்த ஒரு குறிப்புதான். வேறுமாதிரி கிடைத்தாலும் தொடர்ந்து பகிரலாம்.



செவ்வாய், டிசம்பர் 06, 2011

வெகுமதி கலாச்சாரம்.

குட் மார்னிங் விஜி .

வெரி குட் மார்னிங் மிஸ்டர் கூ..

சில முக்கிய பிரமுகர்கள் வர வேண்டியுள்ளது, எத்தனை பேர் என்று சரியாகத்தெரியவில்லை. வந்தவுடன் முதலில் எத்தனை பேர் உள்ளனர் என்பதனை அழைத்துத் தெரிவித்துவிடு. மீட்டிங் அறையைப் பயன்படுத்த அது உதவியாக இருக்கலாம்...

யெஸ் சார்.

நம்முடைய டீலர்ஸ்களில் மிக பிரபலமானவர்கள் இவர்கள். தலைநகரில் இவர்களின் நிறுவனங்கள் தான் நமது பொருட்களை மிக அதிகமாக விற்பனை செய்துவருகிறார்கள். வந்தவுடன் அமரச்செய், எல்லோருக்கும் காப்பி கலக்கிக்கொடு.

யெஸ் மிஸ்டர் கூ.

இங்கே உன் முன்னே இருக்கும் மொனிட்டரில், வெல்கம் என அவர்களின் கம்பனி பெயரோடு அதன் நிருவாகியின் பெயரையும் சேர்த்து ஸ்க்ரீனில் போட்டு விடு.. கொஞ்சம் அழகாக பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கட்டும்.

யா, ஷுவர்..

அந்தப் பெரிய டீ வியில், அவர்களின் கம்பனி சம்பந்தப்பட்ட விளம்பர சீடி ஒன்று நம்ம மெட்ச்சண்டைஸரிடம் இருக்கிறது, அதையும் ஓடவிடு. ஷோ ரூம்மை தூய்மைப்படுத்தச் சொல், air freshener செய்யவும் ஏற்பாடு செய்..

ஒகே பாஸ்..

பிறகு, மதிய உணவும் ஏற்பாடு செய்யவேண்டும். கண்டீனில் ஆர்டர் கொடு, அவர்கள் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு பிறகு ஆடர் செய். உணவில் காரம்  வேண்டாம் என்பதனைச் சொல்லி விடு. சோலிட் ஃப்பூட் இருக்கணும். டிரிங்ஸ் மினரல் வட்டர் போதும்.

நிச்சயமாக ஏற்பாடு செய்கிறேன்..

எல்லா டிப்பார்ட்மெண்ட் ஹெட்களுக்கும் ஒரு மெயில் அனுப்பி இவர்களின் வருகைய அறிவித்து விடு. அவர்களின் எண்ணிக்கையையும் அந்த உணவு லிஸ்டில் சேர்த்து விடு.

ஹ்ம்ம்..

அதில் ஒருவர், பெயர் அப்புறம் சொல்றேன்,  நாளைக்குக் காலையிலே ஃபிலைட்,  இன்று இரவு தங்குவதற்கு சன்வே ஒட்டலில் அறை ஒன்றை பதிவு செய்யவேண்டும்., முதல் வகுப்பு அறை. அதன் பிறகு அவரை அழைத்துச்செல்ல ஒரு டாக்ஸி. இன்று மாலை இங்கிருந்து ஓட்டலுக்கும், பிறகு நாளை காலை ஓட்டலில் இருந்து ஏர்ஃபோர்ட்டிற்கும் செல்லவேண்டும்.  அதற்கும் நாமே ஏற்பாடு செய்யவேண்டும். டாக்ஸி தூய்மையாக இருப்பதை கவனத்தில் கொள்.

ஓ, ஷுவர்..

இப்போது எனக்கு ஒரு அவசர மீட்டிங் உள்ளது, அங்கே போகிறேன். கொஞ்ச நேரமாகலாம். அவர்கள் வந்தவுடன் என் கைப்பேசிக்கு அழை.

ஒகே போஸ்.

இது என் வேலையின் ஒரு பகுதி இவை. இவற்றை சரியாக, மனத்திருப்தி ஏற்படும் படி செய்து இருந்தால், எனக்கு ஒரு ரோஜா மலர்கொத்து அனுப்பி வைப்பார்கள், எங்கிருந்தோ வரும். ஒரு முறை ஒரு மிகப்பெரிய ஹெம்பர் (திண்பண்டங்கள் அலங்கரிக்கப்பட்ட கூடை) வந்திருந்தது, எனது பெயரிட்டு. இன்னமும் தெரியாது அதை யார் அனுப்பியது என்று..!

என் மலாய் நண்பர் எனக்காக

walau langit
jathuh ke bumi
biar pun laut
kering kontang
hidup ini mesti diteruskan

genggam bara
biar jadi abu
kiraan hari
semakin laju
tidak menjadi satu halangan
kerana manusia hidup untuk menempuh
segala dugaan.....

(zul)

வருத்தமில்லை

ஆரம்பத்தில் எனக்கு யாருமில்லை
இடையில் நீ வந்தாய்
கொஞ்ச நாள் தென்றலாய்
எப்போதும் என்னுடனே
இப்போது யாருமில்லை
ஆரம்பமே கட்டமே நிலையானது
எதையும் இழக்கவில்லை
பெற்றது அன்புதான்
அதனால் வருத்தமில்லை.