புதன், ஜூலை 25, 2012

இந்த இரவில் கூட

நான் இருக்கின்றேன்
பாடிக்கொண்டிருக்கின்றேன்
சாமான்களை உருட்டிக்கொண்டிருக்கின்றேன்
கதவை திறக்கின்றேன்
கிரிச் என்கிற சத்தத்துடன் மூடுகின்றேன்
கால்கள் தரையில் உரசுவதைப்போல்
நடக்கின்றேன்
நீரை கீழே விடுகின்றேன்
`ஸ்வீட்ச்’ஐ தட்டுகின்றேன்
மின் விசிரியை சுழல விடுகின்றேன்
மேஜையில் தாளம் போடுகின்றேன்
`ஹம்மிங்’ செய்கிறேன்
உட்கார்ந்திருக்கின்ற நாட்காலியை
முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டிருக்கின்றேன்
வானொலி தொலைக்காட்சியை
முடக்கிவிடுகின்றேன்
தும்முகின்றேன்
கொட்டாவி விடுகின்றேன்
கொசு அடிக்கின்றேன்
கை விரல்களை நெட்டி உடைக்கின்றேன் 
சொந்தமாகவும் பேசிக்கொள்கின்றேன்
இப்படியெல்லாம் அமைதியைக் குலைப்பதால்
நான் உயிரோடு இருக்கின்றேன்.!


11 கருத்துகள்:

  1. நானும் பரிசோதித்து பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. இப்படியெல்லாம் அமைதியைக் குலைப்பதால்
    நான் உயிரோடு இருக்கின்றேன்.!//

    நீங்கள் எழுத்தாளர் மட்டுமல்ல
    சிந்தனையாளரும் நல்ல கவிஞரும் என்பதை
    நிரூபித்துப்போகும் அற்புதமான கவிதை இது
    சாதாரண மான அன்றாட நிகழ்வுகளை கடைசி
    இரண்டு வரிகளில் ஒரு அற்புதமான அனுபவமாக்கிபோகும்
    தங்கள் திறன் கண்டு வியந்தேன்
    மனம் தொட்ட படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற பாராட்டுகள் வருமென்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. திடீர் இன்ப அதிர்ச்சி சார். மிக்க நன்றி.

      நீக்கு
  3. இப்படியெல்லாம் கவிதை எழுத முடியுமா மேடம்? சரிதான். தூங்கும் பொது கூட காலை அசைத்துக்கொண்டு தூங்க வேண்டும் இல்லை என்றால் எடுத்து அடக்கம் செய்துவிடுவார்கள் என்று சும்மாவா சொன்னார்கள்?

    பதிலளிநீக்கு
  4. கையையும் காலையும் சும்மாவே இருக்கவிட மாட்டீர்களோ!

    பதிலளிநீக்கு